அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அச்சுறுத்தல் நியாயமில்லை
சம்பளம் மற்றும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக விடுத்துள்ள அச்சுறுத்தல் நியாயமானதில்லையென சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.
மேலதிக சேவைக் கொடுப்பனவு விடுமுறை கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்ததை நாளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதனையடுத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தது.

