கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு
கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவு தகவல்களை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

