ரயிலில் மோதி ஒருவர் பலி

ரயிலில் மோதி ஒருவர் பலி

தம்புத்தேகம செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (19) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் பலத்த காயமடைந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த நபருக்கு சுமார் 65 வயது இருக்கலாம் எனவும், ஏனைய தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

manel