அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
இம் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இன்று 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இதற்காக 12.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று முதல் வங்கிக் கணக்கிலிருந்து தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

