சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பூஜை.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பூஜை.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமய வழிபாடுகள் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ மயூராபதி பத்தரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுகளுக்கு கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்துக்குரிய சுவாமி அக்ஷ் மகராஜ் அவர்களும் கெளரவ கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இந்து சமய கலாசார அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. ய.அநிருத்னன் உட்பட அதிகாரிகள் ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் திரு.பி சுந்தரலிங்கம் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

manel