சுதந்திர தின கொண்டாட்டம் எளிமையாக..!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் பெப்ரவரி 04ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளது.
இம்முறை பொதுமக்கள் அதிகமாக பங்கேற்கக் கூடிய கொண்டாட்டமாக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில், சுதந்திர தின நிகழ்வுகள் வெகுவிமரிசையாகவும் அதேவேளை, செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நடத்தப்படவுள்ளன.
சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது , இதன்போது, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த ஆகியோரும் விளக்கமளித்தனர்.

