பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில்…!
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல் நலக்குறைவு காரணமாக மானாமதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை அருகே படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் கங்கை அமரன். இளையராஜா இசையமைத்த பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி உள்ளார். எம். எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை இயற்றியுள்ளார்.

