வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து,இருவர் பலி..!
பதுளை கொழும்பு பிரதான வீதியில் பெரகல அப்புத்தளை வியாரகல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் 13 பேரில் 7பேர் பங்கட்டி வைத்தியசாலையிலும் 6 பேர் தியத்தலவை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில்,பங்கட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 7பேரும் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


விபத்துக்குள்ளான வேன் ஒரனை பகுதியில் இருந்து சுற்றுலா வந்து வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸ்சார் தெரிவிததுள்ளனர்.
இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளைபொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.

