“தூய்மையான இலங்கை” வேலை திட்டம்…!

“தூய்மையான இலங்கை” வேலை திட்டம்…!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வேலை திட்டமானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

அச் செயலணியில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என்.எஸ்.குமாநாயக்க பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலியின் பொறுப்புக்கள் “தூய்மையான இலங்கை” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்தல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பனவாகும்.

manel