மின் கட்டண திருத்தம், பொது மக்களின் கருத்து..!
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சேகரிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
கடந்த 27 ஆம் திகதி முதல் மாகாண மட்டங்களில் வாய்மொழி மூல கருத்துக்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஊவா மாகாணத்தில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்களை சேகரிக்கும் செயற்பாடுகள் இன்று காலை 8:30 முதல் பிற்பகல் 1மணி வரை மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறுகிறது.
மின் கட்டண திருத்தம் குறித்தான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணி குழுவின் இறுதி முடிவு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

