காதல் விவகாரத்தால் யுவதி விபரீத முடிவு…!

காதல் விவகாரத்தால் யுவதி விபரீத முடிவு…!

புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவரே நேற்று இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புகையிரதம் வரும் தண்டவாளத்தை நோக்கி மகள் ஓடியதை கண்ட தாயார் மகளை காப்பாற்ற முயன்ற போதிலும் மகள் புகையிரதத்தில் மோதுண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

யுவதியின் சடலம் மதுரங்குளிய புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு , பின் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

manel