கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் கலந்துரையாடல்

கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் கலந்துரையாடல்பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவைக்கும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகம், கல்வி மற்றும் கத்தோலிக்க சமயக் கல்விக்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பிரச்சினைகள் குறித்து முன்னர் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.குறித்த பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காண்பது தொடர்பில் ஆராய்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கலாநிதி ஹெரல்ட் அந்தனி பெரேரா அருட்தந்தை உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஏனைய உறுப்பினர்களான அருட்தந்தைமார், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் டபிள்யூ.ஏ. நீலிகா பெரேரா (பாடசாலை நடவடிக்கைகள்), பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜி.ஐ. சஞ்சீவனி, சுற்றாடல் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) டி.பி.சி. உதய குமார, வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. ஸ்ரீமோகனன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

