பிட்கொயின் மற்றும் ஈதர் பெறுமதியில் கடும் வீழ்ச்சி; பங்குச் சந்தையிலும் தாக்கம்!

பிட்கொயின் மற்றும் ஈதர் பெறுமதியில் கடும் வீழ்ச்சி; பங்குச் சந்தையிலும் தாக்கம்!

உலகின் மிகப்பெரிய மெய்நிகர் நாணயமான பிட்கொயின் (Bitcoin) பெறுமதி, 60,000 அமெரிக்க டொலர் எல்லைக்குக் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் பிட்கொயின் பெறுமதி இந்த எல்லைக்குக் கீழ் வீழ்ச்சியடைந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நேற்று (20) பிட்கொயின் பெறுமதி 3.45 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 59,381 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, உலகின் இரண்டாவது பெரிய மெய்நிகர் நாணயமான ஈதரின் (Ether) பெறுமதியும் 5.23 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 1,648.91 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான பாரிய முதலீடுகளின் இலாபம் குறித்த சந்தேகங்கள், கடன் பெறுவதற்கான செலவு அதிகரிப்பு மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகளும் 2025 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் மிகப்பெரிய வாராந்த வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலையை நோக்கிப் பயணிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

manel

Related Posts