இலங்கையில் ஆண்களை விட பெண்கள் 7.57 இலட்சம் பேர் அதிகம்: சனத்தொகை கணக்கெடுப்பில் தகவல்
சர்வதேச ஆண்கள் தினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படும் நிலையில், இலங்கையில் ஆண்களை விட பெண்களின் சனத்தொகை 7 இலட்சத்து 57 ஆயிரத்து 112 ஆல் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 11,269,456 பெண்களும், 10,512,344 ஆண்களும் உள்ளனர்.
இதற்கமைய, நாட்டின் மொத்த சனத்தொகையில் பெண்கள் 51.7 சதவீதமாகவும், ஆண்கள் 48.3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளனர்.
இந்தப் புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

