ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறை; மன்னார் மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறை; மன்னார் மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், 1 மில்லியன் ரூபா தண்டப்பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மன்னார் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அவரிடமிருந்த ஐஸ் போதை பொருள் பொதியுடன் சேர்த்து 54 கிராம் 40 மில்லிகிராம் மீட்கப்பட்டது.

அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது தூய நிலையில் 3.38 கிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபருக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாவும் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன.

விசாரணைகளின் முடிவில், எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.

manel