டிட்வா சூறாவளியால் சேதமடைந்த கலுகல – யட்டிபேரிய நிலச்சரிவு பகுதியை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்!
‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த அவிசாவளை – ஹட்டன் – நுவரெலியா (A007) பிரதான வீதியின் கலுகல – யட்டிபேரிய நிலச்சரிவு பகுதியை மீளமைக்கும் பணிகள் நேற்று (15) ஆரம்பிக்கப்பட்டன.
யட்டிபேரிய விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய பரேய்யாகல சித்தத்த தேரரின் ஆசியுடன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சியின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனையின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக Soil Nailing மற்றும் Grid Beam போன்ற நவீன பொறியியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
ரூ. 264.4 மில்லியன் மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தை ஒன்பது மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

