மிஹிந்தலை கோர விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி பலி!

மிஹிந்தலை கோர விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி பலி!

மிஹிந்தலை, ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி, மிஹிந்தலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலியோயா சந்திக்கு அருகில் ஏ9 வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதன்போது, அவற்றில் ஒரு பேருந்தின் பின்னால் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 76 பயணிகள் அனுராதபுரம், மெதவச்சி மற்றும் மிஹிந்தலை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 51 பேர் தொடர்ந்தும் அனுராதபுரம் மற்றும் மெதவச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி, பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த நான்கு வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel