தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு!

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு!

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வினாடிக்கு 4,100 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு திறந்து விடப்படுகிறது.

நீர்த்தேக்கத்துக்கு கிடைக்கும் நீரின் அளவு மற்றும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப, திறக்கப்படும் வான்கதவுகளின் அளவு மேலும் மாற்றமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தெதுரு ஓயாவின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

manel