ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை ஆரம்பம்
இ.போ.சபையின் (SLTB) ஹட்டன் டிப்போவினால் ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சௌகரியமான பயண அனுபவத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இச்சேவை முன்னெடுக்கப்படுகிறது.
“ஒரே நாடு… ஒரே பயணம்…” எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் பயணிகள் குறித்த நேரத்தில் சௌகரியமாக தமது இலக்கை சென்றடைய முடியும்.
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான இப்பஸ் கட்டணம் ஒருவருக்கு ரூ. 1,725 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப் புதிய பஸ் சேவையின் நேர அட்டவணை மற்றும் மேலதிக விபரங்களுக்கு ஹட்டன் டிப்போவின் 051 2222 283 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு டிப்போ நிர்வாகம் அறிவித்துள்ளது.

