கலாவாவியின் இரு வான் கதவுகள் திறப்பு: வினாடிக்கு 1,422 கன அடி நீர் விடுவிப்பு

கலாவாவியின் இரு வான் கதவுகள் திறப்பு: வினாடிக்கு 1,422 கன அடி நீர் விடுவிப்பு

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கலாவாவியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, அதன் இரண்டு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வான் கதவுகளின் ஊடாக வினாடிக்கு 1,422 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாவாவியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், தம்புலு ஓயா ஊடாக வினாடிக்கு சுமார் 6,000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக கலாவாவிக்கு பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கலாவாவியின் நீர் கொள்ளளவு 86,280 ஏக்கர் அடி வரை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

manel