அழுங்கு ஒன்றைப் பிடிப்பதற்காக குகைக்குள் சென்ற நபர் சடலமாக!
அழுங்கு ஒன்றைப் பிடிப்பதற்காக குகைக்குள் சென்ற ஒருவர், பாறை சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
பதுளை – கொஸ்லந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊவா மாவெலகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் அழுங்கை பிடிக்கும் நோக்கில் குகைக்குள் சென்றுள்ளார்.
இதன்போது, குகைக்கு மேலே இருந்த பாரிய பாறை அவர் மீது சரிந்து வீழ்ந்ததில், அவர் குகைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

