பலத்த மின்னல் குறித்து வெளியான எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வெளியான எச்சரிக்கை!

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குக் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (25) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.

இதற்கமைய, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

manel