காவன்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு தொடர்பில் ஆராயும் நிபுணர் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

காவன்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு தொடர்பில் ஆராயும் நிபுணர் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், தேசிய யானைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (21) காலை நடைபெறவுள்ளது.

சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்க தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யு.கே. கலிங்க பத்மலால், மருத்துவர் ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

‘காவன்திஸ்ஸ’ யானையின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க இந்த நிபுணர் குழு எதிர்பார்த்துள்ளது.

manel