நாமலின் பிரத்தியேக செயலாளர் கைது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஆணைக்குழுவில் அவர் இன்று ஆஜரான நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அவருக்கு சொந்தமான கல்கிசையிலுள்ள வீட்டில் அண்மையில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் திடீர் சோதனையிடப்பட்டதுடன், அங்கிருந்த பெட்டியொன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

