கொழும்பு, புளுமெண்டல் தீ விபத்து – பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு

கொழும்பு, புளுமெண்டல் தீ விபத்து – பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு.

கொழும்பு, புளுமெண்டல் பகுதியில் ரயில் பாதைக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 வீடுகள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை நேரில் கண்டறிந்து, அவர்களின் அவசரத் தேவைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்காக கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வட கொழும்பு அமைப்பாளர் திரு. சிவானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த கள ஆய்வில், உதவி பிரதேச செயலாளர், மாநகர சபை உறுப்பினர் தோழர் சுதா, புளுமெண்டல் வட்டாரத்தின் கிராம சேவகர் திரு.

நித்தியானந்தன், இப்பிரதேசத்தின் கட்சித் தொண்டர்கள் மற்றும் தோழர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் கேட்டறியப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

manel