கொக்கேய்னுடன் 4 வௌிநாட்டு பிரஜைகள் கைது

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 4 வௌிநாட்டு பிரஜைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இரண்டு ஆண்களும் இரண்டு  பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) மாலை கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றிலும், பிரதான வர்த்தக வளாகம் ஒன்றிலும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது 1 கிலோகிராம் 49 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களும் இரண்டு பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 48 வயதுடைய ஆண்களும், 43 மற்றும் 52 வயதுடைய பெண்களும் ஆகும். இவர்கள் ஜமேக்கா நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது. 

கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

manel