பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் மதுபான சாலையை உடைத்து கொள்ளை

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் மதுபான சாலையை உடைத்து பணம் மற்றும் மதுபான போத்தல்கள் கொள்ளை
பொகவந்தலாவ கெம்பியன் நகரப் பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை ஒன்றை இனம் தெரியாதவர்கள் உடைத்து அதிலிருந்து சில மதுபான போத்தல்களையும் பணத்தையும் களவாடிய சம்பவம் ஒன்று இன்று (08) இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு குறித்த பகுதிக்கு சென்று இனம் தெரியாத நபர் மதுபான சாலையின் முன்பக்க கதவினை உடைத்து உள் நுழைந்து அதில் உள்ள பணத்தையும் மற்றும் மதுபான சாலையில் இருந்த மதுபானம் அடைக்கப்பட்டிருந்த சில போத்தல்களையும் களவாடி சென்றுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் ஹட்டன் தடவியல் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதை வேலை கைவிரல் அடையாள அதிகாரிகளும் சம்பவம் இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
சந்தேக நபரை கைது செய்யும் நோக்கில் பொகவந்தலாவ பொலிஸார் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேலை மதுபான சாலையில் இருந்து ஒரு லட்சத்திற்கு அதிகமான பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த மதுபான சாலையில் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் இனம் தெரியாத நபர் பணத்தை எடுத்து விட்டு குறித்த பெட்டியை வீதி ஓரமாக தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

