விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நீர்வழிந்து ஓடத் தொடங்கியது

விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நீர்வழிந்து ஓடத் தொடங்கியது

மத்திய மலைநாட்டில் தொடர் கனமழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வுமத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அப்பகுதியிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் தற்போது நீர்வழிந்து ஓடத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளதுடன், அவற்றின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகின்றது.விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து, அதன் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.

இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் மத்திய மலைநாட்டிலுள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடும் மழையுடன் மலைப்பாதைகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வாகன சாரதிகள் மற்றும் பாதைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

manel