“வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச சபையில் உள்ளாட்சி மன்ற வாரம் வெற்றிகரமாக நிறைவு

“வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச சபையில் உள்ளாட்சி மன்ற வாரம் வெற்றிகரமாக நிறைவு

“வளமான நாடு – அழகான வாழ்வு” என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி வழிகாட்டுதலின் பேரில், கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திஙதி வரை நாடளாவிய ரீதியில் உள்ளாட்சி மன்ற வாரம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, நுவரெலியா பிரதேச சபையும் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் இன்று (19) வரை உள்ளாட்சி மன்ற வாரத்தை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக முன்னெடுத்து நிறைவு செய்துள்ளது.

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜா அவர்களின் தலைமையில், இவ்வாரத்தை முன்னிட்டு பல்வேறு சமூக மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இந்நிகழ்வுகளின் நிறைவு நாளான இன்று, தவிசாளருக்கான கௌரவிப்பு நிகழ்வு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிண்ணங்கள் வழங்கல், மற்றும் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்வான பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் கந்தபளை சர்மிலா மண்டபத்தில் நடைபெற்றதுடன், உதவி உள்ளாட்சி மன்ற பிரதி ஆணையாளர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இளைஞர்–இளம்பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

manel