The School Craft” திட்டத்தின் கீழ் கந்தபொல கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயம் புனரமைப்பு

The School Craft” திட்டத்தின் கீழ் கந்தபொல கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயம் புனரமைப்பு
– உத்தியோகபூர்வ கையளிப்புஇந்தியா – ரொட்டரி கிளப் மகாபலிபுரம் மற்றும் இலங்கை – ரொட்டரி கிளப் மிட்-சிட்டி, கொழும்பு ஆகியவற்றின் இணைந்த மனிதாபிமான முயற்சியான “The School Craft” திட்டத்தின் கீழ், மலையகப் பாடசாலைகளின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக, நுவரெலியா மாவட்டத்தின் கந்தபொல கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயம் சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கையளிக்கப்பட்ட இந்தப் பாடசாலை மண்டபம், பின்னர் ஏற்பட்ட டிட்வா சூறாவளி மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின் போது சுமார் 250 பேருக்கு நிவாரண மையமாகவும் பயன்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாடசாலையின் அடுத்தகட்ட அபிவிருத்தியின் கீழ், ஐந்து வகுப்பறைகள் புனரமைப்பு, நவீன Smart Classroom அமைத்தல், பாடசாலை இசைக்குழுவிற்கான இசைக்கருவிகள் வழங்குதல், பாடசாலை கட்டிடத்திற்கு புதிய வர்ணம் பூசுதல் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எழுதுபொருட்கள் மற்றும் விளையாட்டு உடைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று 12 செப்டம்பர் 2026 அன்று புனரமைக்கப்பட்ட பாடசாலை வளாகம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.நிகழ்வில் கலந்துகொண்ட ரொட்டரி கிளப் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகத்தினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாடசாலை கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், ரொட்டரி உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து பாரம்பரிய முறையில் வரவேற்பும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பங்கேற்புடன் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. மலையக மாணவர்களின் திறமைகளையும் கலை ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்திருந்தன.
மேலும், கடந்த காலங்களில் கல்வி, கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறப்பான சாதனைகளைப் பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் சிறப்பு கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன.அத்துடன், “The School Craft” திட்டத்தை முன்னெடுத்த ரொட்டரி கிளப் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், திட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ரொட்டரி மாவட்டங்களின் முக்கிய பிரதிநிதிகள், ரொட்டரியன்கள், அரச அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இந்தியா – இலங்கை நட்புறவு, மனிதாபிமான சேவை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான திட்டமாக “The School Craft” அமைந்துள்ளது.
கந்தபொல கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயத்தின் புனரமைப்பு மூலம், மலையக மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு புதியதொரு நம்பிக்கையும் புதியதொரு வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
கஜரூபன் திவ்யா நுவரெலியாThe School Craft” திட்டத்தின் கீழ் கந்தபொல கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயம் புனரமைப்பு – உத்தியோகபூர்வ கையளிப்புஇந்தியா – ரொட்டரி கிளப் மகாபலிபுரம் மற்றும் இலங்கை – ரொட்டரி கிளப் மிட்-சிட்டி, கொழும்பு ஆகியவற்றின் இணைந்த மனிதாபிமான முயற்சியான “The School Craft” திட்டத்தின் கீழ், மலையகப் பாடசாலைகளின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக, நுவரெலியா மாவட்டத்தின் கந்தபொல கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயம் சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.

