யோஷிதவின் மேன்முறையீடு வாபஸ்!
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டை இன்று (07) உயர் நீதிமன்றத்தில் அவர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்ய நேரிட்டால், இந்த விடயத்தை எழுப்புவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு மேன்முறையீட்டை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

