சென்னையில் 130 புதிய மின்சார பஸ்கள் சேவைக்கு அறிமுகம்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்காக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 130 குறைந்த தள (Low-Floor), குளிரூட்டப்பட்ட மின்சாரப் பஸ்களை சென்னை கோட்டை செயின்ட் ஜோர்ஜில் வைத்து சேவைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மின்சாரப் பஸ்கள் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தவும் நவீனமயப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
புதிய பேருந்துகள் மூலம் பயணிகளுக்கு மேலும் வசதியான மற்றும் நவீன பொதுப் போக்குவரத்து சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

