மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெய் விலை!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.49 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

