டொலரின் விற்பனை விலை 341 ரூபாயை கடந்தது

டொலரின் விற்பனை விலை 341 ரூபாயை கடந்தது

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ​

மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, இன்று (16) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 341.08 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

அதன் கொள்வனவு விலை 331.67 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

நேற்றைய தினம் (15) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.92 ரூபாவாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

manel