கிராமிய இளைஞர் மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்

கிராமிய இளைஞர் மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இளைஞர் சேவை அதிகாரிகளையும் (Youth Service Officers) மகரகமையிலுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் (NYSC) பிரதான காரியாலயத்திற்கு அழைத்து, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட மாநாடொன்று நேற்று ( 02) வெற்றிகரமாக நடைபெற்றது.

இளைஞர் சேவை அதிகாரிகளுடன் இணைந்து மாகாண பணிப்பாளர்கள், மாவட்ட உதவி பணிப்பாளர்கள், அனைத்து மாவட்டங்களினதும் ‘நிஸ்கோ’ (NISCO) இளைஞர் கூட்டுறவுச் சங்கங்களின் பொது மேலாளர்கள் மற்றும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒரு ஆண் மற்றும் பெண் இளைஞர் பிரதிநிதிகளும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தேசிய இளைஞர் சேவை மன்றம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இளைஞர் விவகாரப் பிரிவு மற்றும் தேசிய இளைஞர் படையணி (National Youth Corps) ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்படும் புதிய திட்டங்கள் குறித்து இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப் பிரதேச மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள ‘இளைஞர் நாடக விழா’ மற்றும் ‘தேசிய இளைஞர் விருது விழா’ ஆகியவற்றிற்கு தகுதியான இளைஞர், யுவதிகளைப் பங்கெடுக்கச் செய்தல், நாடு முழுவதும் உள்ள இளைஞர் கழகங்களை (Youth Societies) எதிர்வரும் காலங்களில் முறைப்படி மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, தேசிய மட்டத்தில் திட்டமிடப்படும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களை கிராமப்புற இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பாரிய பொறுப்பு இளைஞர் சேவை அதிகாரிகளுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குறைந்த வருமானம் பெறும் இளம் எழுத்தாளர்களின் முதலாவது நூலை அச்சிட்டு வெளியிடுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘சிஹினயட பியாபத்’ (கனவுக்குச் சிறகுகள் / Dream Wing) திட்டம், புதிய தேசிய இளைஞர் கொள்கையை (National Youth Policy) உருவாக்குதல் மற்றும் இளைஞர் மேம்பாடு குறித்த தேசிய ஆராய்ச்சி மாநாடு ஆகிய உன்னத திட்டங்கள் குறித்தும் பிரதி அமைச்சர் மேலும் விவரித்தார்.

இந்த மாநாட்டில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரும் இலங்கை இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன உட்பட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

manel