திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்தில்விசேட அபிவிருத்திக் கூட்டம்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்தில்விசேட அபிவிருத்திக் கூட்டம்

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் நீண்டகாலமாக மக்கள் எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகளுக்கு உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் தீர்வு காண்பதற்கான விசேட அபிவிருத்திக் கூட்டம் இன்று (18-06-2026) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் சியாகுல் ஹக்கின் சிறப்பான ஒழுங்கமைப்பில், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இக்கலந்துரையாடல் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக், முப்படை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது குச்சவெளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களின் அவசரத் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பின்வரும் விடயங்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன

மக்களின் நீண்டகால அடிப்படைப் பிரச்சினைகள். கிராமங்களின் உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள்.
அவசரத் தேவைகளுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வுகள்.

கூட்டத்தில் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றுக்கு உரிய திணைக்களங்கள் ஊடாக உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் எவ்வாறு தீர்வுகளைக் காண்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன.

இவ்வதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியின் மூலம், குச்சவெளி பிரதேச மக்களின் வாழ்வாதாரமும் உட்கட்டமைப்பும் விரைவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manel