திருகோணமலையில் பக்திப் பெருக்குடன் தொடங்கிய ‘சியாம் தம்ம பாத யாத்திரை 2026

திருகோணமலையில் பக்திப் பெருக்குடன் தொடங்கிய ‘சியாம் தம்ம பாத யாத்திரை 2026

இலங்கையின் பௌத்த வரலாற்றில் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக, ‘சியாம் தம்ம பாத யாத்திரை – 2026’ இன்று காலை திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோகண்ணா ராஜமகா விகாரையிலிருந்து மிக விமரிசையாகத் தொடங்கியது.

வரலாற்றுத் தொடர்புகளைப் புதுப்பிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் தாய்லாந்தில் துறவறம் பூண்ட 60-க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள், தாய்லாந்து தசாசில் மாதாக்கள் குழுவினர் மற்றும் இலங்கையின் உள்ளூர் பௌத்த துறவிகள் எனப் பலரும் பக்திப் பெருக்குடன் கலந்துகொண்டுள்ளனர்.

யாத்திரையின் வரலாற்றுப் பின்னணி
கடந்த 1753-ஆம் ஆண்டு, தாய்லாந்தின் (அன்றைய சியாம் தேசம்) உபாலி மகா தேரர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்து, இங்கு ‘சியாம் உபசம்பதா’ (துறவறம் பூணும் சடங்கு) முறையை மீண்டும் நிலைநாட்டினர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் 273-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலேயே, இந்த “சியாம் தம்ம பாத யாத்திரை – 2026” மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாத யாத்திரை செல்லும் வழித்தடம்
திருகோணமலையின் கோகண்ணா ராஜமகா விகாரையிலிருந்து தொடங்கியுள்ள இந்த தம்ம பாத யாத்திரை, நாட்டின் பல முக்கிய வரலாற்று மற்றும் ஆன்மீகப் பகுதிகளைக் கடந்து செல்லவுள்ளது.

(கோகண்ணா ராஜமகா விகாரை)
நகரங்கள்: கந்தளாய் ஹபரணை அனுராதபுரம் தம்புள்ளை மாத்தளை
கண்டி

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான நீண்டகால மத, கலாசார மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த தம்ம பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த பாத யாத்திரை செல்லும் வழிநெடுகிலும் பௌத்த மக்கள் துறவிகளுக்கு தம்ம வழிபாடுகளை ஆற்றி வரவேற்று வருகின்றனர்.

manel