இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு அபராதம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கத் தவறியதால் , அவர்களுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை அபராதமாக விதிக்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இலங்கை அணி இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததாக போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீத அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெந்திஸ் தனது தவற்றை ஒப்புக்கொண்டுள்ளதால், இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் தேவையில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி ஜமைக்காவில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

