ஒரே நாளில் 28,000க்கும் அதிகமானோர் சோதனை!

ஒரே நாளில் 28,000க்கும் அதிகமானோர் சோதனை!

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த சோதனை  நடவடிக்கைகளின் போது 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நேற்று (05) தினத்தில் 28,147 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 22 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 149 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 57 நபர்களும், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 78 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,289 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

manel