யோகா பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு!

யோகா பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் யோகா பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (03) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரணையுடன், தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த யோகாப் பயிற்சி பாடநெறியை வைத்தியர் எச்.எம்.ஹாரிஸ் வழங்கி வைத்தார்.

24 மணித்தியாலம் கொண்டதாக அமைந்த இப்பாடநெறியில், தரம் 6 முதல் 9 வரையான 40 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். இதில், மாணவர்களின் உடல்நலம் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற விடயங்களை எவ்வாறு பேணுல் என்பது தொடர்பாகவே இப்பயிற்சி நெறி அமைந்தது.

பாடசாலையின் அதிபர் ஆர்.பி.ராஜாசுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் பிரதம அதிதி கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அதிகாரிகள், வைத்தியர்கள், தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

manel