மெக்ஸிக்கோ மைதானத்தில் பீலேயின் சிலை
பிறேஸில் தேசிய அணியின் உதைபந்தாட்ட ஜாம்பவான் பீலேயின் சாதனைகளை நினைவுகூரும் வகையில், அவரது பிரம்மாண்டமான சிலை மெக்ஸிகோவில் உலகக்கிண்ணப் போட்டி நடைபெறும் குவாடலஹாரா நகரில் ஜலிஸ்கோ மைஇதானத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
“இங்கு விளையாடி, சிறந்த கோலை அடித்த இந்த மாபெரும் வீரரின் இந்த பிரம்மாண்டமான சிலை, ஜலிஸ்கோ மக்களுக்கும் அனைத்துப் பார்வையாளர்களுக்கும் ஒரு பெரும் பரிசாகும்,” என்று ஜலிஸ்கோ ஆளுநர் பாப்லோ லெமஸ் கூறினார்.
9.5 மீற்றர் (31 அடி) உயரமுள்ள இந்தச் சிலை, 1970, 1986 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய ஜலிஸ்கோ மைதானத்திற்கு வெளியே உள்ள பிளாசா பிறேஸில் என்ற பொது சதுக்கத்தில் அமைந்துள்ளது . 1970-ஆம் ஆண்டு உலகக்கிண்ண சம்பியனாகியபோது முதல் சுற்று, காலிறுதி ,அரையிறுதிப் போட்டிகளை பிறேஸில் இந்த மைதானத்தில் விளையாடியது. பின்னர், மெக்சிகோ நகரத்தில் உள்ள அஸ்டெகா மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இத்தாலியைத் தோற்கடித்தது.
குவாடலஹாராவில் நான்கு உலகக்கிண முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

