புத்தாண்டில் அரச பேருந்துகள் ஈட்டிய வருமானம்

புத்தாண்டில் அரச பேருந்துகள் ஈட்டிய வருமானம்

புத்தாண்டு கால விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்ததன் மூலம், கடந்த 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. 

அதன் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

புத்தாண்டுக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபை வரலாற்றிலேயே ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் பதிவாகியுள்ளது. 

அன்றைய தினம் மாத்திரம் 213 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.

manel