மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதியின் வருகை குறைவு!
நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் தமிழ் மக்கள் மீது அதிகமான அன்பு கொண்டவராக இருந்தாலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்களை பார்வையிடுவதற்கான வருகை குறைவாகவே காணப்படுவதாகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளுக்கு அவருடைய கள விஜயத்தினை அதிகமாக மேற்கொளாவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்று கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி அவர்கள் மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளையும் பிரதானமாக எடுத்து கொண்டு அவர்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் உலகநாடுகளில் பல யுத்தங்கள் இடம் பெற்று கொண்டு இருக்கிறது வளைகுடாவில் இடம் பெறுகின்ற யுத்தம் காரணமாக எமது நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் இல்லை என கூற முடியாது அங்கிருந்து தான் எரிபொருள் வரவேண்டும் காலப்போக்கில் அது வராவிட்டால் எமக்கும் பாரிய நெருக்கடியினை சந்திக்க வேண்டி ஏற்படும் ஒரு தொகை தேயிலையை நாங்கள் ஈரான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம் அங்கிருந்து எமக்கு பணம் வருவதில்லை ஏன் எனில் உமாஒயா திட்டத்திற்கு பெற்ற கடனை நாம் செலுத்தி கொண்டு இருக்கின்றோம். 200வருடங்களுக்கு முன்பு இங்கு வந்ததன் காரணமாக இன்னும் நாங்கள் தொடர் லயன் அறைகளில் வாழக்கூடிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் இந்த நிலமையினை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக காணப்படுகிறது, எமது தேர்தல் விஞ்ஞாபாணத்தில் கூட கானி உரிமை தொடர்பாக கூறியிருக்கின்றோம் இதனைத்தான் சஜீத்பிரேமேதாச ஏற்றுக்கொண்டுள்ளார் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மலையக மக்களுக்கு 20பேச் கானி தருவதாகவும் மலையக மக்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் வாக்குறுதி வழங்கினார் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மலையக மக்களுக்கு பத்து பேச் கானியாவது வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் வீடுகளை அமைத்து கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை கானியை சரி வழங்குங்கள் தோட்ட புறங்களில் உள்ள கானிகளை விடுவிப்பதில் சில பிரச்சினைகள் காணப்படுகிறது ஆகவே எமது அடிப்படை பிரச்சினை கானி பிரச்சினையாக காணப்படுகிறது.காணி தொடர்பாக பேசுகின்ற போது காணி எங்கு இருக்கிறது என எம்மிடம் அரசு கேல்வி எழுப்புகிறது திட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் எவருக்கும் இதுவரை காணி வழங்கப்படவில்லை நுவரெலியா கந்தப்பளை பகுதியில் திட்வா புயலினால் பாதிக்கப்பட்ட 300பேர் தொடர்ந்தும் தோட்ட ஆலயத்தில் தங்க வைக்கபட்டுள்ளார்கள்
குறித்த பகுதியில் இதற்கு முன்பு அந்த பகுதியில் வாழ்வதற்கு பொருத்தமானதல்ல என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய அறிக்கை தற்பொழுது அங்கு வாழ்வதற்கான சூழ்நிலை உள்ளதாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது இது போன்ற பிரச்சனைகள் பல தோட்ட பகுதியில் காணப்படுகிறது என்றார்.
