மலையக மக்களை வாழவைக்க வடக்கு, கிழக்கில் காணி தேடுவதில் தவறில்லை
பாதுகாப்பாக வாழ இங்கே காணி இல்லை என்றால், மாற்று காணிகளை வடகிழக்கில் தேடுவதில் என்ன தவறு? இருக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் – பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மலையக தமிழர், மலையக மண்ணில்தான் வாழ வேண்டும் என நானும் விரும்புகிறேன். ஆனால், பாதுகாப்பான காணி உரிமை தர மறுத்தால், நமது மக்கள் மலை-மண் சரிவில் சிக்குண்டு சாவதா? என மனோ கணேசன் எம்பி கேட்டுள்ளார்.
மணசரிவு பேரவலம் நிகழ்ந்த கண்டி, நாவலப்பிட்டி, கிரேக்ஹீட் தோட்ட, அலுகொல்ல பிரிவு மலை உச்சிக்கு, கட்சி குழுவினருடன் சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது>
மலையக தமிழ் தேசிய இன மக்களுக்கு, தாயகம் மலையக பூமிதான். ஆனால், இதை நாம்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். சிங்கள தேசியம் ஏற்றுக் கொள்ள மறுக்குது.
இதுதான் மலையகத்தின் “காணி-உரிமை-பிரச்சினை”. இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள், முட்டாள் தற்குறிகள் அல்லது வறட்டுவாதிகள் ஆவர்.
நானும், மலையக தமிழர், மலையக மண்ணில்தான் வாழ வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் காணி உரிமை தர மறுத்தால், மக்கள் மலை-மண் சரிவில் சிக்குண்டு சாவதா?
ஆகவேதான், மாற்று யோசனையாக, வடக்கு-கிழக்கு மாகாணங்களில், புலம்பெயர்வினால், காலியாகி, இன்று காடாகி கொண்டிருக்கும் காணிகளை, உரிமையாளர்கள், மனமுவந்து தருவார்கள் ஆயின் அங்கே சென்று குடியேறி உழைத்து வாழ விருப்பமா? என நான் சந்தித்த மக்களிடம் கேட்டேன்.
இதில் குற்றம் காண்பவர்கள், தங்கள் தோழர்களிடம் சொல்லி, “பாதுகாப்பான சாலையோர வசிப்பிட காணிகளை”, மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுங்களே!
மற்றபடி, வறட்டுவாதிகளுக்கும், தற்குறிகளுக்கும், பதில் சொல்லி மாள எனக்கு நேரமில்லை!
ஒரு கட்சி தலைவனான என் நேர்படும் பணி;
(1) மிகப்பேரழிவை சந்தித்த நமது நமது மக்களுக்கு நிரந்தர தீர்வை தேடுவது:
(2) நமது மக்களின் அவலத்தை. தேசத்தின் பொது வெளி பகர்வைக்கு கொண்டு வருவது:
(3) நமது மக்களுக்கு அரசு அறிவித்த அனைத்து நிவாரணங்களும், கிடைப்பதை கண்காணிப்பது:

