தொழிலாளர் தேசிய முன்னணியின் நிவாரண பணிகள் தொடர்கின்றன

தொழிலாளர் தேசிய முன்னணியின் நிவாரண பணிகள் தொடர்கின்றன

தொழிலாளர் தேசிய முன்னணியின் நிவாரண பணிகள் தொடர்வதாக அந்த முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வலப்பனை மஹாவூவ தோட்டம் டேம் பிரிவு 76 குடும்பங்கள் 280 பேரைக்கொண்ட மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த தோட்டத்திற்கு செல்வதற்கு இன்னும் பாதை சீரமைக்கப்படவில்லை. இந்த தோட்டத்திற்கு செல்ல ப்ரேம்லி தோட்டம் வரை வாகனத்தில் செல்ல முடியும்.

இந்த மக்கள் தங்களுடைய அத்தியவசிய தேவைகளை பெற்றுக்கொள்ள ஹைபோரஸ்ட் நகரத்திற்கு 10 Km நடந்து வர வேண்டும் இல்லையென்றால் வலப்பனை நகரத்திற்கு 7 Km நடந்து வர வேண்டும்.

இன்று வரை இவர்களுக்கான மின்சார இணைப்புகள் சரி செய்து கொடுக்கப்படவில்லை. தொடர்ச்சியாக 13 நாட்கள் மின்சாரமில்லாமல் இருளில் இருக்கின்றார்கள்.

இதுவரை தோட்ட முகாமைத்துவம், அரச உத்தியோகத்தர்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை.

நிவாரணம் வழங்கும் நல்ல உள்ளங்களே இன்னும் கால அவகாசம் உள்ளது. வெளிப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரணம் அதிகமாகவே கிடைக்கின்றது.

வெளிப்படுத்தப்படாத பிரதேசங்கள் இன்னும் அப்படியே உள்ளது. சென்றடைய வேண்டியவர்களுக்கு தேடி வழங்குங்கள்.

இரவு 8.00 மணிவரை அவர்களுடன் நேரத்தினை செலவிடவேண்டியிருந்தது. நிவாரண பங்களிப்பினை வழங்கிய தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் ரவீந்திரன் அவர்களுக்கு நன்றிகள்

இன்னும் மனிதாபிமான நிவாரண பணிகள் தொடரும்

இந்த பிரதேசத்தில் இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகள்

மஹாவூவ தொழிற்சாலை பிரிவு
ஹைபோரஸ்ட் இல 01
ஹைபோரஸ்ட் இல 03
ப்ரேம்லி
லொரிஸ்டன்
சார்லிவெலி

இவ்வாநு மேலும் பல தோட்டங்கள் வெளிப்படுத்தப்படாமல் உள்ளதாகவும் முன்னணி குறிப்பிடுகிறது.

எஸ். ரஜீவன்

Related Posts