பெயர்ப் பலகை அகற்றல் வழக்கில் பிரதேச சபை தலைவருக்கு பிணை
வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட நால்வர் இன்று (25) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் வாழைச்சேனை பிரதேச சபையின் ஒப்புதலுடன் அறிவிப்புப் பலகையை வைக்க சந்தேக நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

