இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் மீள ஸ்தாபிப்பு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், இந்தச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் நேற்று (13) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர், அஹமது அலி சையிட் அல்ராஷிதி இக் கூட்டத்தில் அதிதியாகக் கலந்துகொண்டார். பல அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சத்துரி கங்கானி சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

