5 போலி நிறுவனங்கள் ஊடாக ரூ. 24.8 பில்லியன் பெறுமதியான டொலர் பணப் பரிமாற்றம்
5 போலி நிறுவனங்களை பயன்படுத்தி, ரூ. 24.8 பில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிகாவத்தை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பணப் பரிமாற்றங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி நிறுவனங்கள் தொடர்பில் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

