4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) பல மாவட்டங்களுக்கு விடுத்துள்ள நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று ( 05) காலை 9.00 மணி முதல் நாளை (06) காலை 9.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும்.

நிலை 2 (ஆம்பர்/Amber) – தயார்நிலையில் இருங்கள்
கண்டி – உடதும்பர, கங்கா இஹல கோரள, தெல்தோட்ட, பஸ்பாகே கோரள, தொலுவ, மததும்பர, பான்வில, உடபலாத்த
கேகாலை – யட்டியாந்தோட்டை, புலத்கோஹுபிட்டிய, தெஹியோவிட்டை, அரநாயக, தெரணியகல
நுவரெலியா- தலவாக்கலை, அம்பகமுவ, நோர்வூட், கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, நுவரெலியா
இரத்தினபுரி – ஓப்பநாயக்க, இம்புல்பே, இரத்தினபுரி

நிலை 1 (மஞ்சள்/Yellow) – அவதானத்துடன் இருங்கள்
கேகாலை மாவட்டம்: கேகாலை பிரதேச செயலகப் பிரிவு
நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த பிரதேச செயலகப் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்: நிவித்திகல, குருவிட்டை பிரதேச செயலகப் பிரிவுகள்

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், வானிலை தொடர்ந்து மோசமடைந்தால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

manel