2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது வரவேற்பையும் நேர்மறையான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக மலையக பெருந்தோட்டத்துறை மற்றும் அதன் மேம்பாட்டுக்காக 13,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் திறம்பட நடைமுறைப்படுத்தினால், மலையக மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள் மற்றும் மலையக மக்களின் நலனை முன்னிறுத்தி சம்பள உயர்வு மற்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மலையகப் பகுதியில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்களின் போக்குவரத்துச் சுமையைத் தணிக்கும் வகையில் பேருந்து சேவைகளை சீரமைப்பதுடன், குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மலையகப் பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரிப் பாதுகாப்பதன் மூலம் எதிர்கால குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும், நீண்டகாலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் செயற்படுவதாகவும் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், நாட்டின் எதிர்கால நலனை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த 2027 பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

manel

Related Posts